பிற மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் : எந்த பேருந்து நிலையம் வந்தடையும்..? - அமைச்சர் விளக்கம்
2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை காரணமாக லட்ச கணக்கானோர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு தங்கள் குடும்பங்களுடன் சென்றனர். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதோடு தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் பயணித்தவர்களுக்கு நிகராக சொந்த வாகனங்களில் தங்கள் சொந்த ஊருக்கு சென்றவர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் இருந்தது.
இந்த நிலையில் 2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள தகவலின் படி..
2024 - பொங்கல் திருநாளை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த அனைத்துப் பேருந்துகளும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கத்திற்கு வந்தடையும். மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் மற்ற போக்குவரத்து கழகங்களை சார்ந்த அனைத்துப் பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.” என மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.