Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சென்னையில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது” - மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல்

07:09 AM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது  என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

Advertisement

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின.  அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்த நிலையில், ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து நேற்று(ஜன.8) மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதையும் படியுங்கள்: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் அவதி

இந்நிலையில் சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

“சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (ஜன.09) அனைத்து பேருந்துகளும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணிமனைகளில் இருந்தும் அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது.

பயணிகள் பேருந்து இயக்கம் தொடர்பாக எந்தவித அச்சமும் இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.  மேலும், அனைத்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் முழுமையாக கண்காணித்து வருகின்றனர்.”

இவ்வாறு ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

 

Tags :
alby john vargheseBUSChennainews7 tamilNews7 Tamil UpdatesTN Govt
Advertisement
Next Article