For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 வயது சிறுமி உயிரிழப்பு!

10:00 PM May 03, 2024 IST | Web Editor
மேட்டுப்பாளையம்   கோத்தகிரி சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து   8 வயது சிறுமி உயிரிழப்பு
Advertisement

மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Advertisement

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் பவானிசாகர் காட்சி முனைப்பகுதியில் எதிர்பாராத விதமாக பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. பெரம்பலூரில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த இந்த பேருந்து கவிழ்ந்து, ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்துக்கு அடியில் சிக்கி 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். பேருந்தை அப்புறப்படுத்தி சிறுமியின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags :
Advertisement