ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்து - 78 பேர் பலி
ஆப்கானிஸ்தான் மேற்கு ஹெராத் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று புலம்பெயர்தோரை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. குசாரா மாவட்டத்தில் உள்ள ஹெராத் நகர் அருகே சென்று கொண்டிருந்த பேருந்து,எதிரே வந்த ஒரு லாரி மற்றும் பைக் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தினால் பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இந்தனல் பேருந்தில் பயணித்த பயணிகளில் 17 குழந்தைகள் உட்பட 78 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ஈரான் அகதிகளை ஏற்றிக் கொண்டு காபூல் நகரை நோக்கி பஸ் சென்ற போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பேருந்து விபத்து ஒன்றில் சுமார் 52 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.