Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்து - 25 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
07:39 AM Aug 28, 2025 IST | Web Editor
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
Advertisement

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட், கந்தஹார் பகுதிகளில் இருந்து பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்த போது காபூலின் அர்கண்டி பகுதியில் விபத்திற்குள்ளானது.

Advertisement

இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில்,

பேருந்தின் ஓட்டுநர் அலட்சியமாக செயல்பட்டதால் தான் விபத்து ஏற்பட்டதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் கனி கூறியுள்ளார். இதேபோல் மேற்கு ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 80 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Accidentafghanistanbus accidentkilledworld
Advertisement
Next Article