ஐசிசி 2024-ன் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார் பும்ரா!
2024ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஜஸ்பிரித் பும்ராவை அறிவித்தது ஐசிசி.
07:05 PM Jan 28, 2025 IST | Web Editor
Advertisement
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
Advertisement
அதன்படி 2024-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்படுகிறது என ஐசிசி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பும்ராவிற்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆவார். ஏற்கனவே 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.