For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

6 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டம் காண வைத்த பும்ரா - தனது மகனுக்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சி!

06:59 AM Feb 04, 2024 IST | Web Editor
6 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டம் காண வைத்த பும்ரா   தனது மகனுக்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சி
Advertisement

6 விக்கெட்களை வீழ்த்தி அதிரடியாக பந்து வீசிய இந்திய பந்துவீச்சாளர் பும்ரா , தனது மகனுக்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் விசாகப்பட்டிணத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ஷுப்மன் கில் 5 பவுண்டரிகள் உள்பட 34 ரன்கள் சேர்த்து கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார்.

4-ஆவது பேட்டராக வந்த ஷ்ரேயஸ் ஐயர், ஜெய்ஸ்வாலுடன் இணைந்தார்.  நிதானமாக ஆடி விக்கெட் சரிவைத் தடுத்த இந்தக் கூட்டணி ரன்களை எண்ணிக்கையை உயர்த்தியது.
இதனைத் தொடர்ந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை இந்திய அணி குவித்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணியின் சார்பில் யெசஸ்வி ஜெய்ஷ்வால் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் விளாசினார். ஜெய்ஷ்வால் அதிரடியாக விளையாடி 290 பந்துகளுக்கு 209 ரன்கள் குவித்துள்ளார்.  நேற்றைய போட்டியில் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 396ரன்களை குவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாகவே ரன்கள் சேர்க்கத் தொடங்கியது. தொடக்க வீரர் ஜாக் கிராலி பவுண்டரிகள் விளாச, உடன் வந்த பென் டக்கெட் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.  அரைசதம் கடந்த இங்கிலாந்து  வீரர் கிராலி 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 76 ரன்களுக்கு எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க அதிரடியாக ரன்கள் சேர்த்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அனைத்து விக்கெட்களையும் இழந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் 253 ரன்களுக்கு எடுத்தது.  இந்திய பந்துவீச்சாளர் பும்ரா அதிரடியாக பந்துவீசி 6விக்கெட்களை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஆட்ட நேர முடிவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 28 ரன்கள் குவித்தது  ஜெய்ஸ்வால் 15, ரோஹித் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன் மூலம் இந்தியா 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் தான் எடுத்த 6 விக்கெட்டுகளை தனது மகனுக்கு அர்ப்பணிப்பதாக பும்ரா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement