Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்தியா சென்றாரா #BTSsuga? - நடந்தது என்ன?

01:34 PM Aug 26, 2024 IST | Web Editor
Advertisement

BTS சுகா தனது பதிவிற்கு ஏற்பட்ட தவறுக்கு, மீண்டும் மன்னிப்பு கோரிய பதிவிலும் தவறு ஏற்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

Advertisement

உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவை சேர்ந்த  BTS. ஜின், சுகா,  ஆர்.எம், ஜே-ஹோப்,  ஜிமின், வி,  ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த இசைக்குழு ஏராளமான இசை ஆல்பங்களையும்,  பாடல்களையும் வாரி வழங்கியுள்ளது.

தென்கொரியாவின் சியோலில் உள்ள பிரபல வணிக நகரமான ஹன்னம்-டாங்கில் உள்ள ஒரு தெருவில் பிடிஎஸ் குழுவில் ஒருவரான சுகா கடந்த 26ஆம் தேதி விழுந்து கிடந்தார். அதனைப் பார்த்த அங்கிருந்த போலீசார் அவருக்கு உதவ முயன்றுள்ளனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததை அறிந்தனர். பின்னர் அவர் மது அருந்தியுள்ளரா என்பதை அறிவதற்கு ப்ரீத் அனலைசர் சோதனையும் மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர் அளவுக்கதிகமான குடித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது தனக்கு கால் வலி எனவும் இதன் காரணமாகத்தான் கிக்போர்டு உள்ள ஸ்கூட்டரை ஓட்ட குறைவாக குடித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் விசாரணையில் சுகா ஓட்டியது எலெக்ட்ரிக் கிக்போர்டு அல்ல, இருக்கையுடன் கூடிய மின்சார ஸ்கூட்டர் அல்லது ஸ்கூட்டர் பைக்குக்கு சமமான கொரிய ஸ்கூட்டர் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள் : “எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம்” – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் #Duraimurugan!

தென்கொரியாவில் குடிபோதையில் ஸ்கூட்டர் ஓட்டினால் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை தோராயமாக 3 முதல் 800 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும். சுகாவின் இந்த செயலுக்கு BTS-ன் பிரதி நிறுவனமான பிக்ஹிட் மியூசிக் மன்னிப்புக் கோரியது. பலர் சுகாவின் இந்த செயலுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இது தொடர்பாக சுகா தனது வருத்ததை ஒரு பதிவை பதிவிட்டார். அதில் தவறு ஏற்பட்டதால், அந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒரு பதிவை சுகா பதிவிட்டார். இதற்கிடையே, இந்நாட்டின் Weverse என்ற செயலி மூலம் மொழி பெயர்க்கப்பட்டதில் தவறு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர் பதிவிட்டதாவது ;

"ஆகஸ்ட் 6, 2024 அன்று இரவு, குடித்துவிட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்தியாவுக்குச் சென்றேன். மேலும்,  நான் அவசரமாகப் பதிவிட்ட முதல் பதிவில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மன்னிக்கவும். நான் கவனமாக இருந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
apologyBigHitMusicBTSSugacasefansnotePoliceTranslation
Advertisement
Next Article