ராணுவ விருதுகளுடன் பட்டம் பெற்ற BTS-ன் RM மற்றும் Kim Taehyung: வீடியோ வைரல்!
தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினர்கள் RM தான் ராணுவத்தில் சேருவதை நீண்ட காலமாக ஒத்திவைத்ததாகவும், அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இசைக்குழுக்களில் தென்கொரியாவின் BTS-ம் ஒன்று. இளைஞர்களின் உணர்வுகளுடன் ஒன்றிணையும்படியான வரிகளை தங்களது பாடல்களில் புகுத்தியதன் மூலம் உலகம் முழுவதும் BTS பிரபலமடைந்தனர். அவர்களில் தோற்றமும், பாடல்களும், இசையும் உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றது.
தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு பணியாற்ற வேண்டும். இதில் கே-பாப் கலைஞர்களும் விதிவிலக்கல்ல. அதன்படி BTS உறுப்பினர்களும் ராணுவ பயிற்சியை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி முன்னதாக ஜின், ஜே-ஹோப், சுகா ஆகிய மூவரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராணுவ பயிற்சியை தொடங்கினர். இதனிடையே மீதமுள்ள 4 உறுப்பினர்களும் விரைவில் ராணுவ பயிற்சியை தொடங்குவார்கள் என்றும், ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பிக்ஹிட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து டிச. 11-ம் தேதி RM மற்றும் V ராணுவ பயிற்சியை தொடங்கியதாக பிக்ஹிட் நிறுவனம் தெரிவித்தது. தொடர்ந்து டிச. 12-ம் தேதி ஜிமின் மற்றும் ஜங்கூக் ஆகியோரும் ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. எனவே BTS உறுப்பினர்கள் அனைவரும் ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர், அவர்கள் மீண்டும் 2025-ல் குழுவாக தொடர உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
27연대 9중대 180번 #김남준 훈련병
수료식 영상 txt🐨
저는 입대 자체를 장기간 미뤄왔고 또 나이가 제법 있는 상태에서 입대하다보니 많은 것들이 두렵고 걱정이 됐었던 것이 사실입니다또한 늦게 입대하는 바람에 같이 생활했던 생활관의 동기들은 거의 대부분이 저와 열 살 가량 차이나는 어린… pic.twitter.com/ACp4mxKZGm
— 김무원 (@jooniefighting) January 16, 2024
இந்நிலையில், கடந்த மாதம் ராணுவப் பயிற்சியைத் தொடங்கிய RM மற்றும் V , உயர்மட்ட விருதுகளுடன் பட்டம் பெற்றுள்ளனர். இந்த வீடியோக்கள் ஆன்லைனில் பகிரப்பட்டன. குறிப்பாக, இருவரும் உயரடுக்கு பயிற்சி பெற்றவர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். இந்த நிகழ்வில் ஆறு உயரடுக்கு பட்டதாரி பயிற்சியாளர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
RM பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தினார். அப்போது தான் ராணுவத்தில் சேர தாமதப்படுத்தியது குறித்து அவர் பேசினார். அவர் கூறியதாவது:
“நான் ராணுவத்தில் சேருவதை நீண்ட காலமாக ஒத்திவைத்தேன் என்பது உண்மைதான். நான் மிகவும் வயதான காலத்தில் இராணுவத்தில் சேர்ந்ததால், பல விஷயங்களைப் பற்றி பயந்து கவலைப்பட்டேன். மேலும் தங்குமிடத்திலுள்ள எனது சகாக்களில் பெரும்பாலோர் என்னை விட சுமார் 10 வயது இளையவர்களாக இருந்தனர். கொரியாவில் அடிப்படை ராணுவப் பயிற்சியின் அவசியத்தை உணர்ந்தேன்” என்று தெரிவித்தார்.