Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’கூலி’ படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல் BTS வீடியோ வெளியீடு!

’கூலி’ படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல் BTS வீடியோ வெளியானது.
09:59 PM Jun 28, 2025 IST | Web Editor
’கூலி’ படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல் BTS வீடியோ வெளியானது.
Advertisement

‘வேட்டையன்’ படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கூலி’. ரஜினிகாந்தின் 171வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், கிஷோர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்தது.

Advertisement

இப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்தாண்டு ஏப்ரலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கடந்தாண்டு ‘சிக்கிடு வைப்…’என்ற தலைப்பில் சிறிய அளவிலான பாடலின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முன்னதாக வெளியான ‘சிக்கிடு வைப்…’ பாடலின் மியூசிக் வீடியோ கடந்த ஜூன் 25ம் தேதி வெளியானது. இதனை, டி.ராஜேந்தர் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், 'சிக்கிட்டு' பாடலின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags :
anirudhChikituCoolieLokeshRajiniRajinikanthsuperStarThalaivar
Advertisement
Next Article