For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2 வாரங்களில் ராணுவ பயிற்சியிலிருந்து திரும்புகிறார் BTS-ன் ஜின்!

12:19 PM May 29, 2024 IST | Web Editor
2 வாரங்களில் ராணுவ பயிற்சியிலிருந்து திரும்புகிறார் bts ன் ஜின்
Advertisement

ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினரான ஜின் 2 வாரங்களில் திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இசைக்குழுக்களில் தென்கொரியாவின் BTS-ம் ஒன்று.  இளைஞர்களின் உணர்வுகளுடன் ஒன்றிணையும்படியான வரிகளை தங்களது பாடல்களில் புகுத்தியதன் மூலம் உலகம் முழுவதும் BTS பிரபலமடைந்தனர். அவர்களில் தோற்றமும்,  பாடல்களும்,  இசையும் உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றது.

தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு பணியாற்ற வேண்டும்.  இதில் கே-பாப் கலைஞர்களும் விதிவிலக்கல்ல.  அதன்படி BTS உறுப்பினர்களும் ராணுவ பயிற்சியை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி முன்னதாக ஜின்,  ஜே-ஹோப்,  சுகா ஆகிய மூவரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராணுவ பயிற்சியில் ஈடுப்பட்டனர்.  இதனிடையே மீதமுள்ள 4 உறுப்பினர்களும் விரைவில் ராணுவ பயிற்சியை தொடங்குவார்கள் என்றும்,  ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பிக்ஹிட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்திருந்தது.

இந்நிலையில்,  ஜின்,  ஜே-ஹோப், சுகா ஆகிய மூவரின் ராணுவ பயிற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  ராணுவ பயிற்சி முடிந்து இன்னும் இரண்டு வாரங்களில் நாடு திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பின்னர்,  அடுத்த மாதம் 15ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : “சென்னை ஏரிகளில் 47% நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும்” – அதிகாரிகள் தகவல்!

தொடர்ந்து டிச. 12-ம் தேதி ஜிமின் மற்றும் ஜங்கூக் ஆகியோரும் ராணுவ பயிற்சியை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.  எனவே BTS உறுப்பினர்கள் அனைவரும் ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்,  அவர்கள் மீண்டும் 2025-ல் குழுவாக தொடர உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே,  ராணுவ பயிற்சிக்கு ஜின் செல்வதற்கு முன்பு இணையத் தொடர் ஒன்றில் நடித்து வந்தார்.  அவர் நடித்து வந்த ஆஸ்ட்ரோனாட் கார்ட்டூன் கதாபாத்திரம் இணையத் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இணையத்தில் பரவியது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement