For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TVKFlagல் BSP யின் யானை சின்னம் - தமிழ்நாட்டிற்கு No.. அசாம், சிக்கிமில் பயன்படுத்தலாம் | எப்படி?

07:02 PM Aug 22, 2024 IST | Web Editor
 tvkflagல் bsp யின் யானை சின்னம்   தமிழ்நாட்டிற்கு no   அசாம்  சிக்கிமில் பயன்படுத்தலாம்   எப்படி
Advertisement

தவெக கொடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னம் இடம்பெற்றுள்ளதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அசாம், சிக்கிமைத் தவிர பிற மாநிலங்களில் பிற கட்சிகள் பயன்படுத்த ஏன் தடைவிதித்து என்பது குறித்து விரிவாக காணலாம்

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொடியை சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்தார். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ‘தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது' எனும் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்த பாடலில் இடம் பெற்றுள்ள பல்வேறு காட்சிகள் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. திராவிட இயக்கத்தின் முன்னோடியான பேரறிஞர் அண்ணா மற்றும் இரட்டை இலையை குறிக்கும் விதமாக இரண்டு விரல்களை காட்டியபடி எம்.ஜி.ஆர் நிற்கும் உருவம் பாடலில் இடம் பெற்றுள்ளது.

imageஇருபெரும் அரசியல் தலைவர்களுக்கு நடுவே விஜய் நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதன் மூலம் தனது அரசியல் பயணம் குறித்து அவர் இதைத் தான் சொல்ல வருகிறார் என பலரும் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். இதேபோல கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளின் படங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1993 ஆம் ஆண்டு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அசாம், மணிப்பூர் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் எந்த வடிவிலும் கட்சி கொடியிலோ அல்லது சின்னமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளதாகவும் எனவே தவெக கொடியிலிருந்து யானை சின்னத்தை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏன் அசாம்... சிக்கிம் மட்டும்..?

யானைச் சின்னத்தை தேர்தல் சின்னமாக பயன்படுத்துவதில்  சில கட்சிகளுக்கிடேயே பிரச்னை ஏற்பட்டு அது தேர்தல் ஆணையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது யானை சின்னத்தை பயன்படுத்துவது குறித்து அசாம் கண பரிஷத் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பட்டாளி மக்கள் கட்சி மற்றும் சிக்கிம் சங்ராம் பரிஷத் ஆகிய கட்சிகளிடம்  சுமுகமாக பேசி தீர்க்கும்படி தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த கூட்டத்தில் அசாம் கண பரிசத் பொதுச் செயலாளர் அதுல் போரா மற்றும் டாக்டர் பிரபின் சந்திர சர்மா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்ஷிராம், பாமக சார்பில் எழில்மலை மற்றும் எஸ்எஸ்பியின்  எஸ் ராம் தாஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஆகியோர் புது டெல்லியில் ஒன்றுகூடி இந்த விவகாரம் குறித்து முடிவெடுத்தனர்.

ஜம்மு காஷ்மீர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஆகிய மாநிலங்களில்  அங்கீகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சிக்கு யானையை சின்னமாக தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இருப்பினும், பல ஆண்டுகளாக, யானை சின்னத்தை பயன்படுத்தும் அசாமின் ஆளும் கட்சியான அசாம் கண பரிசத், சிக்கிம் மாநிலத்தில்  எஸ்எஸ்பியின் கட்சியும் பயன்படுத்தி வருவதால் அசாம் மற்றும் சிக்கிம் ,  அதேபோல பாண்டிச்சேரி நீங்களாக அனைத்து மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி யானைச் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அஸ்ஸாம் தவிர மற்ற மாநிலங்களில் அசாம் கண பரிசத்தும், பாண்டிச்சேரிக்கு வெளியே பாமகவும், சிக்கிமுக்கு வெளியே எஸ்எஸ்பியும் போட்டியிட்டால், ஒரே சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த முடிவு அப்போதைய தேர்தல் ஆணையர் ஜி.வி.ஜி கிருஷ்ணமூர்த்திக்கு  தெரிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Tags :
Advertisement