Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கொளத்தூர் அருகே கொடூரம் : சொத்துத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!

08:06 AM Mar 20, 2024 IST | Web Editor
Advertisement

கொளத்தூர் அருகே  ராஜமங்கலம் பகுதியில் சொத்திற்காக பெற்ற தந்தையை சமையல் எரிவாயு சிலிண்டரால் அடித்துக் கொன்ற மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

கொளத்தூர் ராஜமங்கலம் 6 வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் மதுசூதனன் (68). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மதுசூதனுக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள்
உள்ளனர். மூத்த மகனான ஜார்ஜ் புஷ் என்பவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்
எனக் கூறப்படுகிறது. இதனால், அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து
சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : தொடங்கியது ஜனநாயக திருவிழா – தமிழ்நாட்டில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

இந்நிலையில், மதுசூதனன் வசிக்கும் வீடு சொந்த வீடு என்பதால் அந்த வீட்டை ஜார்ஜ் புஷ்ற்கு எழுதி கொடுக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 10 நாட்களாக மதுசூதனுக்கும் ஜார்ஜ் புஷ்ஷிற்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்று ( மார்ச் - 19 )  இரவு இருவருக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.
தந்தை மற்றும் மகன் இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், ஜார்ஜ் புஷ் மதுசூதனனை வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரால் தலையில் அடித்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த மதுசூதனன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இருவரிடையே ஏற்பட்ட தகராறில் தந்தை தாக்கியதால் ஜார்ஜ் புஷ்க்கும் காயம் ஏற்பட்டதால் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் ஜார்ஜ் புஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜமங்கலம் காவல்துறையினர் மதுசூதனின் உடலை மீட்டு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சொத்திற்காக பெற்ற தந்தையை சமையல் எரிவாயு சிலிண்டரால் மகன் அடித்தே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
arrestedChennaideathfatherGas cylinderkolathurPoliceRajamangalamSon
Advertisement
Next Article