Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் : ஒற்றைக் கையுடன் அசத்தும் டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள்!

09:48 PM Aug 06, 2024 IST | Web Editor
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஒற்றைக் கையுடன் டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் அசத்திவருகின்றனர்.

Advertisement

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள்  ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஒற்றைக் கையுடன் விளையாடி பார்வையாளர்களை அசரவைத்துள்ளார் பிரான்ஸைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஒருவர். முதன்முதலாக பிரேசிலின் கைகளை இழந்த டேபிள் டென்னிஸ் நட்சத்திரமான புருனா அலெக்ஸாண்ட்ரே, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் அவரின் பாராலிம்பிக் கனவு நனவாகப் போகிறது.

புருனா அலெக்ஸாண்ட்ரே, த்ரோம்போசிஸ் என்றழைக்கப்படும் ரத்தம் உறைதல் நோயால் பாதிக்கப்பட்டு மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரது வலது கை துண்டிக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதல் பாரா-தடகள வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் புருனா அலெக்ஸாண்ட்ரே.

இதையும் படியுங்கள் : கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரிய வழக்கு! மத்திய அரசு, கூகுள் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதுகுறித்து அலெக்ஸாண்ட்ரே கூறுகையில்,

“நான் பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற முயற்சித்து வருகிறேன். பிரேசிலில் போட்டி மிகவும் கடுமையாக இருப்பதால் அது கடினமாக இருக்கும் என்று எனக்கு நன்கு தெரியும். ஆனால், நான் அதில் வெற்றியும் பெற்றேன். அதனால், நான் இங்கு வந்து இருக்கிறேன். இன்று என்னுடைய மிகப்பெரிய கனவு நனவாகி இருக்கிறது”

இவ்வாறு அவர் கூறினார்.

அலெக்ஸாண்ட்ரே ஏற்கனவே பதக்கங்களை வென்ற பாராலிம்பியன் ஆவார். இவர் 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார். அவர் பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக கடந்த 7ம் தேதி களமிறங்கினார். முதல் போட்டியில் சக்திவாய்ந்த தென்கொரிய வீராங்கனைகளை எதிர்கொண்டார். மூன்றாம் தரவரிசையில் உள்ள தென் கொரியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் பிரேசிலின் சவாலை முறியடித்தனர்.

ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற ஒரே பாராலிம்பிக் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரே மட்டுமல்ல. வலது கை செயலிழந்த ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மெலிசா தாப்பர் என்ற வீராங்கனை தன்னுடைய மூன்றாவது ஒலிம்பிக்கில் பங்கேற்று அசத்திவருகிறார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய விராங்கனை மெலிசா தாப்பர் கூறியதாவது :

“தன் நாட்டிலிருந்தும், உலகெங்கிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதியாக தன்னைப் பார்க்கிறார்கள். தன்னைப் போன்று இருக்கும் மற்ற வீரர்களுக்கும் இது நல்வாய்ப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நமது நாட்டிலும் இதுபோன்ற விளையாட்டை மேம்படுத்த உதவும். அதைச் செய்வதற்கு விளையாட்டு ஒரு சிறந்த வழியாகும் என்று நான் நினைக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Bruna AlexandreOne-armedParisParisOlympicsParisOlympics2024table tennis players
Advertisement
Next Article