Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பிரதர்.... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது பொதுவெளியில் மன்னிப்பு கேளுங்க..!” - சமுத்திரக்கனி வலியுறுத்தல்!

04:22 PM Nov 30, 2023 IST | Web Editor
Advertisement

பிரதர் ஞானவேல் ராஜா இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது... பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்!”  என இயக்குனர் சமுத்திரக்கனி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கிய போது அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இது சமூக வலைதள பக்கங்களில் பேசுபொருளானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இயக்குநர் மற்றும் நடிகராக திகழும் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதிராஜா, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் அமீருக்கு ஆதரவாக அறிக்கை விட்டு, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் பருத்திவீரன் திரைப்படத்தில் கதாநயகனாக நடித்த கார்த்தி, நடிகர் சூர்யா இவ்விருவரின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான சிவக்குமார் ஆகியோர் இவ்விவகாரத்தில் தொடர்பில்லாதவர்கள் போல் இருப்பது குறித்தும் விமர்சித்திருந்தனர்.

பிரச்னை பூதாகரமான, ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:

“பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.  நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை.  என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்று தான் நான் அவரை குறிப்பிடுவேன்.  ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன்.  அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.

அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி! அன்புடன் ஞானவேல்ராஜா” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஞானவேல் ராஜாவின் விளக்கமும் விவாதத்துக்கு உள்ளாகியது. இவ்விவகாரம் குறித்து மீண்டும் அறிக்கை வெளியிட்ட இயக்குனர் சசிக்குமார், ‘போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது’  திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்தி விட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்?  என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இயக்குநர் சசிகுமார் கேள்வி எழுப்பினார். 

இவரை தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனியும் ஞானவேல் ராஜா பகிரங்கமாக பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது...
நீங்க செய்ய வேண்டியது.. எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால் சேற்ற வாரி இறைச்சீங்களோ... அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..! நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்...! அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா... கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு... அப்புறம் "பருத்திவீரன்" திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்... அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க... நீங்கதான், "அம்பானி பேமிலியாச்சே..!"

காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..!

இவ்வாறு சமுத்திரக்கனி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Tags :
பருத்திவீரன்AmeerAmeer SultanGnanavel RajaKarthiKollywoodnews7 tamilNews7 Tamil UpdatesParuthiveeranParuthiveeran IssueSamuthirakanisasikumarSuryatamil cinema
Advertisement
Next Article