For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

துடைப்பம், வாளி, ப்ரெஷ்.. கல்யாண கிஃப்ட் அலப்பறைகள்.. நெல்லையில் கலகலப்பை ஏற்படுத்திய திருமண விழா..

06:59 AM Apr 06, 2024 IST | Web Editor
துடைப்பம்  வாளி  ப்ரெஷ்   கல்யாண கிஃப்ட் அலப்பறைகள்   நெல்லையில் கலகலப்பை ஏற்படுத்திய திருமண விழா
Advertisement

நெல்லை பணகுடியில் திருமண விழாவில் மணமக்களுக்கு நண்பர்கள் துடைப்பம், வாளி உட்பட பல்வேறு பொருட்களை கொடுத்து கலாய்த்த சம்பவம் திருமண விழாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Advertisement

சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கின்றன. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் நண்பர்கள் செய்யும் விஷம காரியங்களும் நாம் பார்த்துள்ளோம். 

திருமணங்களில் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் தோழர்கள் மற்றும் உறவினர்களின் கேலி கலாட்டாக்களும் மிக வேடிக்கையாக இருக்கும். இவர்கள் மணமக்களை கிண்டல் செய்ய ஒரு வாய்ப்பையும் விட்டு வைப்பதில்லை. இவை சில சமயங்களில் மணமக்களுக்கு பல தர்மசங்கடங்களையும் ஏற்படுத்துவதுண்டு. தற்போதும் மணமக்களின் ஒரு பரிதாபமான வீடியோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு அதிர்ச்சிதான் கிடைக்கும்.

அந்த வகையில், நெல்லை மாவட்டம் பணகுடியில் பார்த்திபன் - கவிதா ஜோடிக்கு நேற்று (ஏப். 5) திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட மணமகன் பார்த்திபனின் நண்பர்கள் மணமக்களை கலாய்க்கும் விதமாக வாரியல் (துடைப்பம்), பிளாஸ்டிக் வாலி, கப், பாத்ரூம் கிளீனர், கால் மிதியடி உட்பட பல்வேறு பொருட்களை திருமண பரிசாக வழங்கினர். இச்சம்பவம் திருமண மண்டபத்தில் காண்போர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Tags :
Advertisement