"#Britain -ல் மக்கள்தொகை முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரிப்பு" - ஏன் தெரியுமா?
பிரிட்டனில் மக்கள்தொகை விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவுகளைக் கொண்டு சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது :
" 2023 மத்தியில் இருந்த மக்கள் தொகை விகிதமானது, 2022ம் ஆண்டின் மத்தியில் இருந்ததைவிட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. இது 1970ம் ஆண்டு இருந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை விட அதிகம். வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இறப்பு விகிதம் பிரிட்டனில் அதிகரிப்பதால் இயற்கையான மக்கள் தொகை விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.இது குறைவான கருவுறுதல் விகிதத்தைக் குறிக்கிறது
இதையும் படியுங்கள் : INDvsBAN | இந்திய அணியின் சவாலை சமாளிக்குமா வங்கதேச அணி? இன்று 2வது டி20 கிரிக்கெட் போட்டி!
பிரிட்டனில் மக்கள்தொகை சற்று அதிகரித்ததற்கு மற்றொரு காரணமாக சர்வதேச இடம்பெயர்வு பார்க்கப்படுகிறது. 2023ம் ஆண்டு மத்தியில் மட்டும் 6,77,300 பேர் பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒரு சதவீதமும், ஸ்காட்லாந்தில் 0.8 சதவீதமும், வடக்கு அயர்லாந்தில் 0.5 சதவீதமும் மக்கள்தொகை விகிதம் அதிகரித்துள்ளது"
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.