For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசு முறை பயணம் – அடுத்தாண்டு இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர்!

07:31 AM Nov 24, 2024 IST | Web Editor
அரசு முறை பயணம் – அடுத்தாண்டு இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர்
Advertisement

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது மனைவி கமிலா அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு வரவுள்ளனர்.

Advertisement

நடப்பாண்டு தொடக்கத்தில் பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறிடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் அவரது உடல் நிலையில் புத்துணர்வை ஏற்படுத்தும் என பிரிட்டன் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து லண்டனில் உள்ள ‘டெய்லி மிரா்’ நாளிதழ் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :

"இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், வங்க தேசத்துக்கும் மன்னர் சார்லஸ் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததால் பாகிஸ்தான், வங்க தேச நாடுகளுக்கான மன்னரின் சுற்றுப் பயணம் கைவிடப்பட்டது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டது” – ரஷ்ய அமைச்சர் ஆண்ட்ரேய் பெலூசொவ்!

இதையடுத்து, பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்:

"வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அளவுக்கு மன்னரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரசு முறைப் பயணமாக மன்னர் சார்லஸ் இந்தியா வருவது, உலக அரங்கில் பிரிட்டனுக்கு மிகப்பெரிய அரசியல் மற்றும் கலாசார முக்கியத்துவத்தை அளிக்கும். கடந்த மாதம் ஆஸ்திரேலியா மற்றும் சமோவா நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது பெங்களூருவில் ஆயுர்வேத, இயற்கை மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு நாடு திரும்பினர்"

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement