மெட்ரோவில் திருமண மண்டபத்திற்கு வந்த மணப்பெண் | வீடியோ வைரல்!
போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க மணப்பெண் ஒருவர் தனது சொந்த காரை விட்டு விட்டு மெட்ரோ மூலம் திருமண மண்டபத்திற்குச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக எந்த ஒரு சுப காரியத்திற்காகவும் வேறு இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டுமென்றால் 2 மணி நேரத்திற்கு முன்பே புறப்படும் இடத்தை விட்டு வெளியேற வேண்டும். அந்த வகையில், ஒரு மணமகள் பெங்களூரில், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி தனது திருமணத்திற்கு சரியான நேரத்தில் சென்றடைந்தார். பெங்களூரு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மெட்ரோவின் தானியங்கி நுழைவு வாயில் வழியாக செல்லும் போது மணமகள் கேமராவை நோக்கி கை அசைப்பது போன்று வீடியோயில் காணப்படுகிறது. இந்த காணொளியில் மணப்பெண் பளபளக்கும் சேலை, கனமான நகைகள் மற்றும் மேக்கப் அணிந்து மெட்ரோவில் பயணிப்பதைக் காணலாம். பின்னர் திருமண இடத்திற்கு வந்து மேடையில் அமர்ந்து விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த வீடியோ Forever Bangalore என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஜனவரி 16 அன்று பகிரப்பட்டது. பகிரப்பட்ட பிறகு, 20,000 க்கும் அதிகமானோர் அதைப் பார்த்துள்ளனர். மேலும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்வதன் மூலம், சிலர் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.