Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காலை உணவுத் திட்டம் : இனி 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
08:29 AM Aug 24, 2025 IST | Web Editor
நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "காலை உணவுத் திட்டத்தில், இனி 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்!

Advertisement

நீதிக்கட்சி முதல் நமது திராவிட அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்! வரும் 26-08-2025 அன்று நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் #CMBreakfastScheme விரிவாக்கம் செய்கிறோம்.

நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும்! தமிழ்நாடு நாளும் உயரும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
breakfast schemeCHIEF MINISTERDMKhungryM.K. StalinstudentsTamilNadu
Advertisement
Next Article