பிரைடன் கார்ஸுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸுக்கு 3 மாத கால போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பிறந்த பிரைடன் கார்ஸ் தற்போது இங்கிலாந்தின் தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணி சார்பாக 14 ஒருநாள் மற்றும் மூன்று டி20 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில், அவர் 303 முறை சூதாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐசிசி விதிப்படி அது குற்றம் என்பதால், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் விதிமுறைகளை மீறிய காரணத்தால் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸுக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட அவர், போட்டித்தடை காலத்தின் பின்னர் சிறப்பாக செயற்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “ஜூன் 4-க்கு பிறகு மோடி சும்மா தான் இருப்பார்” – நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு!
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது :
“எனது செயல்களுக்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். இங்கிலாந்து தேசிய அணியில் இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருகின்றேன். எனக்கு ஆதரவளித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியதிற்கு நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அடுத்த 12 வாரங்களில் நான் மீண்டும் விளையாடத் தொடங்கும் போது மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவிற்கு ஏற்றல் போல் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துவேன்”
இவ்வாறு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் தெரிவித்துள்ளார்.