வாட்டர் ஹீட்டரில் கை வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்ததில் 50% காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!
வாட்டர் ஹீட்டரில் கை வைத்த சிறுவன் மின்சாரம் தாக்கி சுடு நீர் கொட்டியதால் 50 சதவீத காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராணா ரகுவான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், குளிப்பதற்காக வீட்டில் வாட்டர் ஹீட்டர் மூலம் பாதுகாப்பற்ற முறையில் வாளியில் தண்ணீர் சூடாகி கொண்டிருந்தது. அப்போது அவருடைய 5 வயது மகனான
ராஜூ ராம் சூடாகிக் கொண்டிருந்த தண்ணீர் மீது கைகளை வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள் ; பொது சிவில் சட்டம் - இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்..!
இதையடுத்து, மின்சாரம் தாக்கி அந்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு சுடு தண்ணீர் முழுவதும் சிறுவனின் உடலில் கொட்டியதில், 50 சதவீதத்திற்கும் மேலான காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் கண்டு பதறி போன பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுவனை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறுவன் மீது சுடுநீர் ஊற்றப்பட்டதால் 50% தீக்காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.