For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#BoxOffice | வசூலை வாரி குவிக்கும் #DemonteColony2 ! எவ்வளவு தெரியுமா?

06:18 PM Aug 25, 2024 IST | Web Editor
 boxoffice   வசூலை வாரி குவிக்கும்  demontecolony2   எவ்வளவு தெரியுமா
Advertisement
அருள்நிதி நடித்துள்ள 'டிமான்ட்டி காலனி 2' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான திரைப்படம் 'டிமான்ட்டி காலனி 2'. இத்திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎஃப்எக்ஸ் என ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் இப்படம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக உள்ளது.
இப்படத்திற்கு ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டியதால் இப்படம் வெளியான 2-ஆவது வாரத்தில் கூடுதல் திரைகளில் திரையிடப்பட்டது. முதல் வாரத்தில் 275 திரைகளில் வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படம் தற்போது 350க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்படுகின்றன. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதன் மூன்றாம் பாகம், நான்காம் பாகம்கூட எடுக்கலாம் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Advertisement

தற்பொழுது திரைப்படம் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது. வாழை மற்றும் கொட்டுக்காளி திரைப்படம் இந்த வாரம் வெளியானாலும் தமிழ் நாடு முழுக்க டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் இன்னும் பல ஸ்கிரீன்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், இத்திரைப்படம் உலகளவில் ரூ.32 கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement