Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குத்துச்சண்டை பயிற்சி செய்யும் பிரான்ஸ் அதிபர் - புகைப்படங்கள் வைரல்!

10:29 AM Mar 22, 2024 IST | Web Editor
Advertisement

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குத்துச்சண்டை பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Advertisement

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவின் 75 வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  தொடர்ந்து ஜெய்ப்பூரில் உள்ள சுற்றுலாத்தளங்களை பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து அவர் கண்டுகளித்தார்.  பின்னர் அவர் ஜெய்ப்பூரில் உள்ள டீக்கடை ஒன்றில் தேநீர் அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குத்துச்சண்டை பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.  பிரான்ஸ் அதிபரின் இந்த புகைப்படங்களை புகைப்படக் கலைஞர் சோசிக் டி லா மொய்சோனியர் (Soazig de la Moissonnière) இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டது.   இந்த படங்கள் 12,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் ஏராளமான கருத்துகளையும் பெற்றுள்ளன.  இதற்கு பலரும் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
boxingEmmanuel MacronFranceinstagramPresident of FranceViral
Advertisement
Next Article