For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாக்ஸிங் டே டெஸ்ட் - தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துமா இந்திய அணி!

09:30 AM Dec 26, 2023 IST | Web Editor
பாக்ஸிங் டே டெஸ்ட்   தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துமா இந்திய அணி
Advertisement

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் இன்று விளையாட உள்ள நிலையில், வரலாற்று வெற்றி கிட்டுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Advertisement

தென்னாப்பிரிக் க அணிக்கு எதிராக இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. தற்போது இன்று மதியம் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது.

தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. கடந்த 2 முறை பயணம் செய்த போது டெஸ்ட் தொடரை கைப்பற்ற மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்த போதும், இந்திய வீரர்கள் தவறவிட்டனர். அதிலும் கடந்த முறை முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றும், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது

இந்த நிலையில் புதிய வரலாறு படைக்க இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சென்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் முதல் டெஸ்ட் நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் அதிக பவுன்ஸ் மற்றும் வேகத்தில் வீசினால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்ப்பதே கடினமாகும்.

அதேபோல் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் செஷன் மதியம் 1.30 மணிக்கு தொடங்கி 3.30 மணி வரை நடக்கும். அதன்பின் 2வது செஷன் மாலை 4.10 மணிக்கு தொடங்கப்பட்டு 6.10 மணி வரை நடக்கும். அதேபோல் கடைசி செஷன் மாலை 6.30 மணிக்கு தொடங்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு முடிவடையும்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளில் விளையாடப்படும் போட்டிக்கு பாக்ஸிங் டே டெஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று நடக்கவுள்ள பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement