‘பவுன்டரி டூ பாக்ஸ் ஆபிஸ்’ - இந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், சினிமா டயலாக் மற்றும் பாடல்களுக்கு அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு வருவார். இதற்கு அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் இருந்தது. இதனிடையே புஷ்பா 2 படத்தில் வார்னர் நடிப்பதாக வதந்திகள் வெளியானது.
தொடந்து சமீபத்தில் டேவிட் வார்னர் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதுபோல் புகைப்படங்கள் வெளியானது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு தயாரிப்பாளர் ரவி சங்கர், டேவிட் வார்னர் தனது ‘ராபின்ஹுட்’ படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிப்பதாக தெரிவித்தார். இப்படத்தில் நடிகர் நிதின் கதாநாயகனாகவும், ஸ்ரீ லீலா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் 28 ஆம் தேதி வெளியாகிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ‘ராபின்ஹுட்’ படக்குழு டேவிட் வார்னரை இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்துவதாக போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில் பவுண்டரி டூ பாக்ஸ் ஆபிஸ் வெல்க்கம்மிங் டேவிட் வார்னர் டூ இந்தியன் சினிமா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் டேவிட் வார்னர் தனது எக்ஸ் பதிவில், “இந்திய சினிமாவுக்கு வந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.