"கரூர் சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு உள்ளது” - பிரேமலதா விஜயகாந்த்..!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ் நாடு முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்னும் சுற்றுப்பயணம் மேர்கொண்டு வருகிறார். அந்த வகயில் இன்று கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணம் நடத்தினார். அப்போது பேசிய அவர், ”வெளி நாட்டுக்கு சென்று என்ன முதலீடுகளை ஈர்த்து வந்தீர்கள், எத்தனை தொழிற்சாலைகளை உருவாக்கினீர்கள் என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இளைஞர்களுக்கு இந்த அரசு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். கர்நாடகாவின் கழிவு நீர் கே.ஆர்.பி அணையில் கலப்பதை நிறுத்த உறுதி செய்ய வேண்டும்.
கரூரில் பாதுகாப்பு கொடுக்க தெரியாமல் 41 உயிர்களை பலி கொடுத்து இருக்கிறார்கள். 9 நாட்கள் ஆகிறது. மாநில, தேசிய நெடுஞ்சாலையில் மக்களை சந்திக்க கூடாது என தடை விதிக்கிறார்கள். மக்கள் எங்கு உள்ளார்களோ அங்கு தான் சென்று சந்திக்கும் யாரோ செய்த தவறுக்கு ஏன் தேமுதிகவை வஞ்சிக்கிறீர்கள். இன்று இருப்பவர்கள் பேசுவது சினிமா வசனம். அன்று விமானம் பிடித்து வீட்டுக்கு சென்றவர் இன்று வரை வெளியில் வரவில்லை. விஜய் மக்களை நேரடியாக சென்று சந்திக்க வேண்டும். அவர் அறிவித்த பணத்தை நேரில் சென்று வழங்க வேண்டும். புஸ்சி ஆனந்த் தலைமறைவு என சொல்கிறார்கள். ஏன் மறைய வேண்டும், தூக்கிலா போட்டு விடுவார்கள், தலையை வாங்கி விடுவார்களா..?. எதையும் எதிர்கொள்ள தைரியம் வேண்டும். கரூர் சம்பவத்தில் இரு தரப்பு மீதும் தவறு உள்ளது.
இன்றைக்கு இவ்வளவு கட்டுப்பாடு விதித்தீர்கள், அதை தேமுதிக மதிக்கிறது. ஆனால் கரூரில் குறுகலான பகுதியில் பேச அனுமதி கொடுத்தது யார்..?. ஆம்புலன்ஸ் வாகனத்தை கூட்டத்தில் அனுமதித்தது யார்..?.ஆம்புலன்ஸ் வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய் பேசும் போது யார் செருப்பு ,கல் வீசியது இதற்க்கு அரசு பதில் கூற வேண்டும். இதுவரை செருப்பு வீசிய நபரை அரசு கைது செய்யவில்லை ஏன்..?. கட்சி தொண்டன் அந்த காரியத்தை செய்வானா? உள்ளூர் ரவுடிகள் தான் அந்த காரியத்தை செய்துள்ளனர். யார் மறைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளியில் வரும். கூட்டத்தை கட்டுபடுத்த போதிய காவல்துறை இல்லை. ஆட்சியாளர்கள் வருகிறார்கள் என்றால் 10000 போலிசார் நிற்கின்றனர்.
குறித்த நேரத்தில் விஜய் வரவில்லை. மக்கள் காத்து இருக்கிறார்கள் என்ற பொறுப்பு வேண்டாமா? விஜய் படபிடிப்பிற்கு சரியாக சென்று விடுவார். நாங்கள் கட்சி ஆரம்பித்த போது காவல்துறை சப்போர்ட் கிடையாது. ஆனால் நாங்கள் அமைத்த தொண்டர் படை தான் மக்களை பாதுகாத்தது. மின்சாரம் நிறுத்தப்பட்டதால் தான் கூட்ட நெறிசல் ஏற்பட்டது, ஜென்ரேட்டர் தான் ஆப் ஆனது என கூறுவது பொய். நம்பி வந்தவர்களுக்கு, தண்ணீர், சாப்பாடு, பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவர் பேருந்துக்குள் புகுந்துகொள்கிறார். 4 மணி நேரம் நின்று வரவேண்டியது தானே விஜய் அவர்கள். அண்ணன் என கூறும் விஜய் அண்ணன் என்ன செய்தார் என கற்றுக்கொள்ள வேண்டும். விஜயை நம்பி வந்த அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று வரை வெளியில் வராதது தவறு. கைது செய்தால் கைது செய்து கொள்ளட்டும். கள்ளகுறிச்சியில் கள்ளசாராயம் குடித்து மக்கள் செத்தார்கள். இன்று சென்றவர்கள் ஏன் கள்ளகுறிச்சி செல்லவில்லை. இது அனைத்துக்கும் பின்னால் அரசியல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.