நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த அமர்வின் போது 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அவையின் வேலை நேரம் 118 சதவீததிற்கும் அதிகமாக இருந்ததாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், வக்பு திருத்த மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என்ற சோனியா காந்தியின் கூற்று துரதிர்ஷ்டவசமானது மற்றும் அவையின் கண்ணியத்திற்கு எதிரானது என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.