Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீபாவளி போனஸாக விரும்பிய பைக்கை பரிசளித்த முதலாளி - மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்!

12:09 PM Nov 02, 2023 IST | Web Editor
Advertisement

கோத்தகிரி அருகே எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் தீபாவளி போனஸ் பரிசாக 15 பேருக்கு புதிய புல்லட் பைக் உட்பட விரும்பிய இரு சக்கர பைக் வாகனங்களை வழங்கி தொழிலாளர்களை மகிழ்ச்சியில் திகைத்த வைத்துள்ளார்.

Advertisement

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள எஸ்டேட்டின் உரிமையாளர் தொழிலதிபர் சிவகுமார். திருப்பூரைச் சேர்ந்த இவர் கோத்தகிரி பகுதிகளில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறி, தேயிலை மற்றும் கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் பரிசு கொடுப்பதை சிவக்குமார் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை போனஸ் பரிசாக தனது நிறுவனத்தில் பணிபுரியும் 15 ஊழியர்களுக்கு புல்லட் பைக் உட்பட விரும்பிய இருசக்கர பைக் வாகனங்களை வழங்கியுள்ளார். அதிலும் பேதம் பார்க்காமல் டிரைவர் முதற்கொண்டு மேனேஜர் வரை எல்லோருக்குமே இருசக்கர வாகனத்தை போனஸாக வழங்கி அசத்தியுள்ளார்.

மேலும் தொழிலாளர்களுடன் இரு சக்கர வாகனத்தில் ஒன்றாக பயணித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இதனை சக தொழிலாளர்கள் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில் உரிமையாளரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Tags :
BikesBonusDiwaliDiwali BonusGiftKothagiriNews7Tamilnews7TamilUpdatesNilgirisooty
Advertisement
Next Article