பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் | பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பரில் நடைபெற உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் மூலம், அடுத்தாண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் அணிகள் முன்னேற்றம் அடைய வாய்ப்பு கிடைக்கும். கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியாவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள் : “பட்டாசு தொழிற்சாலைகளில் உயிரிழப்போரின் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மேலும், கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி விவரம்:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லியான், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.
இத்தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஏற்கெனவே தங்களது பயிற்சியை ஆரம்பித்துவிட்டனர்.