Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கான புக்கிங் தொடங்கியது!

03:21 PM Jul 11, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியன் 2 திரைப்படத்திற்கான புக்கிங் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் சமுத்திரகனி,  பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், விவேக், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இந்தியன் 2 சிறப்புக் காட்சியை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி கோரி லைகா தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தமிழக அரசிடம் முறையிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நிபந்தனைகளுடன் சிறப்புக் காட்சியை திரையிடுவதற்கு நாளை ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்க வேண்டும் என்றும் நள்ளிரவு 2 மணிக்கு கடைசி காட்சியை முடித்துவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு திரையில் அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உரிய போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி ஒளிபரப்புவதற்கு இடையே சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற போதிய நேரம் ஒதுக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளதாக அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இப்போதே உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள். இந்தியன் 2 திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. சேனாதிபதியின் மறுமலர்ச்சிக்கு தயாராகுங்கள் எனக்கூறப்பட்டுள்ளது.

Tags :
anirudhBookings OpenIMAXindian2Kamal haasanLyca Productionmovie updatenews7 tamilNews7 Tamil UpdatesRevival Of Senapathyshankar
Advertisement
Next Article