For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் | 17 வயது சிறுவன் கைது!

07:05 AM Oct 17, 2024 IST | Web Editor
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்    17 வயது சிறுவன் கைது
Advertisement

விமானங்களுக்கு சமூக ஊடகம் வாயிலாக போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் சத்தீஸ்கரைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவரை மும்பை காவல்துறை கைது செய்தது.

Advertisement

மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலிருந்து கடந்த திங்கள்கிழமை புறப்பட்ட 3 சா்வதேச விமானங்களுக்கு ‘எக்ஸ்’ வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பாதுகாப்புச் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. பின்னா், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது கண்டறியப்பட்டது.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமையன்று, தில்லியிலிருந்து சிகாகோ புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், தமிழகத்தின் மதுரையிலிருந்து சிங்கப்பூா் சென்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உள்பட 7 உள்நாட்டு, சா்வதேச விமானங்களுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அவை போலி மிரட்டல்கள் என்று உறுதியானது. இச்சம்பவங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள், பணியாளா்கள் சிரமத்துக்கு ஆளாகினா். இதுகுறித்து மும்பை காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா். விசாரணயில் திங்கள்கிழமை மிரட்டல் விடுத்தது சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கானைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவா் என்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து சத்தீஸ்கா் விரைந்த போலீஸாா், அவரை கைது செய்து மும்பை அழைத்து வந்தனா்.

சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்த சிறுவனுக்கு 4 நாள்கள் காவல் வழங்கப்பட்டது. மாணவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையின்படி வீட்டின் அருகேயுள்ள கடைக்காரருக்கும் மாணவருக்கும் இடையே நிதி விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடைக்காரரின் பெயரில் ‘எக்ஸ்’ தளத்தில் போலி கணக்கை தொடங்கிய மாணவா், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். விசாரணைக்கு ஆஜராகுமாறு மாணவரின் தந்தை மற்றும் மேலும் ஒரு நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல்களுக்கும் இந்த மாணவருக்கும் தொடா்பில்லை என்பதால் அதற்கு பின்னணியிலுள்ள நபா்களைக் கண்டறிய போலீஸாா் விசாரணையைத் தொடா்கின்றனா். 19 விமானங்களுக்கு மிரட்டல்: கடந்த மூன்று நாள்களில் 19 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஆகாசா விமானம், 4 இண்டிகோ விமானங்கள், 2 ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

விமானப் படை விமானத்தில் பயணித்த இந்திய பயணிகள்: தில்லியில் இருந்து 191 பயணிகள், 20 விமானப் பணியாளா்களுடன் அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானத்துக்கு சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் கனடாவின் இகாலுயிட் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில், பயணிகள் அனைவரையும் இகாலுயிட்டில் இருந்து சிகாகோவுக்கு கனடா விமானப் படை விமானம் அழைத்துச் சென்ாக ஏா் இந்தியா நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.

Tags :
Advertisement