திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து அங்கு பலத்த சோதனை நடந்து வருகிறது.
04:36 PM Sep 02, 2025 IST | Web Editor
Advertisement
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்து வருவது வழக்கம். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 10 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
Advertisement
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் சோதனை செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதே போன்று திருச்சி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.