Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ம.பி.யில் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
07:48 PM Feb 04, 2025 IST | Web Editor
Advertisement

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கந்த்வா சாலை மற்றும் ராவ் பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதனையடுத்து பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர்.

Advertisement

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் இரு பள்ளிகளிலும் சோதனை மேற்கொண்டனர். ஆனால் எந்த வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இது புரளியாக இருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்தூர் மாவட்ட கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியா கூறுகையில், இரண்டு பள்ளிகளிலும் RDX வைக்கப்பட்டிருந்ததாக மின்னஞ்சலில் செய்தி வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சலில் சில தகவல்கள் தமிழ் மொழியில் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்” என தெரிவித்தார்.

Tags :
bomb threatMadhya pradeshPoliceSchool
Advertisement
Next Article