டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு இன்று காலை 11:40 மணிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கறிஞர், மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.இன்றைய வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மேலும் இது தொடர்பாக டெல்லி காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்துபோலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுனர்கள் ஆகியோர் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்றம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனையில் இதுவரை அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியை தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் இந்தியா முழுவதிலும் ஆட்சியர் அலுவலகம் மற்றும் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது குருப்பிடதகுந்தது.