பாகிஸ்தானில் பள்ளிப் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் - 4 குழந்தைகள் பலி... 38 பேர் காயம்!
தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் 38 பேர் காயமடைந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் குஜ்தார் மாவட்டத்தில் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது பேருந்து மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் துணை காவல் ஆணையர் யாசிர் இக்பால் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புக்கு உடனடியாக எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினரையும், பொதுமக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் பலூச் பிரிவினைவாதிகள் மீது சந்தேகம் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, குழந்தைகளின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் கூறுகையில், அப்பாவி குழந்தைகளைக் குறிவைக்கும் மிருகங்களுக்கு எந்தவொரு கருணையும் காட்டப்படக் கூடாது, எனக் கூறியுள்ளார்.