பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு கத்தி குத்து!
மும்பையில் இன்று நடிகர் சைஃப் அலி கானை அடையாளம் தெரியாத கொள்ளையன் கத்தியால் குத்தி சென்றுள்ளார்.
08:47 AM Jan 16, 2025 IST
|
Web Editor
Advertisement
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் இன்று (ஜன.16) அதிகாலை மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கொள்ளையனால் தாக்கப்பட்டாதாக செய்தி வெளியாகியுள்ளது. தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்ததால் அவர் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர், சைஃப் அலிகானை அதிகாலை 2 மணியளவில் தனது வீட்டிற்குள் கத்தியால் குத்தினார். அதைத் தொடர்ந்து அவர் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
Next Article