For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹிந்தி சீரிஸ் பார்த்து #anupamkher படத்துடன் கள்ளநோட்டு... சிக்கிய குஜராத் கும்பல்...

01:40 PM Sep 30, 2024 IST | Web Editor
ஹிந்தி சீரிஸ் பார்த்து  anupamkher படத்துடன் கள்ளநோட்டு    சிக்கிய குஜராத் கும்பல்
Advertisement

குஜராத் மாநிலத்தில் ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதில் திரைப்பட நடிகரான அனுபம் கேரின் புகைப்படத்தை அச்சடித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

Advertisement

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாபாரி ஒருவரிடம் 2 நபர்கள் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றி விட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ரூ.1.60 கோடி மதிப்புள்ள அந்த கள்ள நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்துக்கு பதிலாக இந்தி நடிகர் அனுபம் கெர் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய் ரிசர்வ் வங்கி என அச்சிடுவதற்கு பதிலாக ரிசோல் இந்திய ரிசோல் வங்கி என அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும், State bank என்பதற்கு பதிலாக start bank என்றும் பிழை மேல் பிழையாக அச்சிடப்பட்டிருக்கிறது.

காவல் துறையினர் அந்த நோட்டுகளைக் கைப்பற்றி அச்சிட்ட கும்பலைத் தேட ஆரம்பித்தனர். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் தான் இந்த நோட்டுகள் அச்சிடப்பட்டிருக்கின்றன என்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர். அந்நகரில் ஆன்லைன் ஆடை விற்பனை நிலையத்தை நடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்நான்கு பேரும் சூரத் நகரில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கே ஆடை விற்பனையகம் நடத்துவதைப் போல கள்ளநோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளனர்.

சூரத் சிறப்புக் காவல் படையினர் தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் ஆன்லைன் அடையகமாக செயல்பட்டு வந்த கள்ள நோட்டு அச்சடிக்கும் இடத்துக்குச் சென்று 3 பேரைக் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் நான்காவது நபர் கைது செய்யப்பட்டார்.

இந்தியில் கள்ள நோட்டு அச்சிடுவதைக் கதைக்களமாகக் கொண்டு ‘ஃபர்சி’ என்கிற வெப் சீரிஸ் வெளியாகி மிகப் பிரபலமடைந்தது. இந்தி நடிகர் ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் அந்த சீரிஸ் வெளியானது. அதன் தாக்கத்திலேயே தாங்கள் கள்ள நோட்டு அச்சடித்ததாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்தி அறிந்த இந்தி நடிகர் அனுபம் கெர் அவரது படம் அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘காந்தி படத்துக்குப் பதிலாக என் படமா? என்ன வேண்டுமானாலும் நடக்கும் போல’ என்று பகிர்ந்துள்ளார். கள்ள நோட்டு அச்சடிப்பவர்களுக்கு காந்திக்கும் அனுபம் கெருக்கும் கூடாவா வித்தியாசம் தெரியாது என சமூக வலைதளங்களில் பலரும் ட்ரால் செய்து கொண்டிருக்கின்றனர்.

Tags :
Advertisement