நடுவானில் திடீரென பறந்த ஜன்னல் - அதிர்ச்சியில் உறைந்த விமான பயணிகள்!
போயிங் 737-9 மேக்ஸ் விமானம் நடுவானில் சென்ற போது திடீரென ஜன்னல் உடைந்து பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போயிங் 737-9 மேக்ஸ் விமானம் நடுவானில் சென்ற போது திடீரென ஜன்னல் உடைந்து பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட அடுத்த சில நொடிகளில் நடுவானில் ஜன்னல் பறந்ததால் பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தின் ஜன்னல் பறந்ததை அடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் போர்ட்லேண்ட்டில் இருந்து கலிஃபோர்னியாவுக்கு விமானம் புறப்பட்டபோது இந்த விபரீதம் நிகழ்ந்தது.
இதையும் படியுங்கள் : கணவன் இறந்துவிட்டதாக தவறாக அறிவித்த மருத்துவமனை – சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி!
இந்த நிலையில், விமானத்தில் இருந்து ஜன்னல் உடைந்து விழும் போது பலத்த சத்தம் ஏற்பட்டது. அந்த சத்தம் கேட்டதாதும் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். மேலும் 16,000 அடி உயரத்தில் ஜன்னல் வெடித்து சிதறியதாக விமானத்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பயணிகள் பத்திரமாக விமானத்தில் இருந்து தரையிறங்கப்பட்டனர். இந்த நிலையில், விமானத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஃபெடரல் ஏவியேஷன் ஆணையத்தால் (FAA) நவம்பர் 2023 ஆம் ஆண்டில் சான்றளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
🚨 BREAKING: Alaska Airlines Performs Emergency Landing AfterWindow Blows Out
Items such as phones were sucked out of the plane when it depressurized.
Passengers are safe. pic.twitter.com/ay79k8uLBh
— Erin Elizabeth Health Nut News 🙌 (@unhealthytruth) January 6, 2024