#Wayanad நிலச்சரிவில் மாயமான நபரின் உடல் பாகம் கண்டெடுப்பு? வெளியான அதிர்ச்சித் தகவல்!
வயநாடு நிலச்சரிவில் மாயமான நபரின் உடல் பாகம் மரக்கிளையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜுலை 29ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் மாயமாகினர். இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் மாயமான நபரின் உடல் பாகம் மரக்கிளையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : #ProKabaddiLeague | பெங்கால் வாரியர்ஸ், புனேரி பால்டன் அணிகள் வெற்றி!
வயநாட்டின் மலைப்பகுதியில் உள்ள பரப்பனபரா கிராமம் அருகே மரக்கிளையில் மனித உடல்பாகம் கண்டெடுக்கப்பட்டது. இது நிலச்சரிவில் உயிரிழந்த நபரின் உடல்பாகமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த உடல்பாகத்தை மீட்ட வனத்துறையினர் டிஎன்ஏ பரிசோதனைக்காக அட்டமலையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
டிஎன்ஏ பரிசோதனையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகம் வயநாடு நிலச்சரிவில் மாயமான நபரின் உடல்பாகமா? என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு 3 மாதங்களுக்கு பிறகு மனித உடல்பாகம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.