"மறைந்த #SitaramYechury -ன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை மறுநாள் வைக்கப்படும்" - CPIM கட்சிச் தலைமை அறிவிப்பு!
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை மறுநாள் வைக்கப்படும் என அக்கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று நோய் பாதிப்பால் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்து வந்த அவரது உடல்நிலை கடந்த ஒரு சில நாட்களாக கவலைக்கிடமாக இருந்து வந்தது.
கடந்த 20 நாள்களுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கை சுவாசக்கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். இதையடுத்து, அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் : ஆடவர் #Longjump -ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜிதின் தங்கம் வென்று அசத்தல்!
இந்நிலையில், , மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நாளை மறுநாள் (செப்.14) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வைக்கப்படும் என அக்கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதன் பிறகு அவரது உடல் ஆய்வுக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக ஒப்படைக்கப்படும்.