Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் இன்று கொச்சின் கொண்டு வரப்படுகிறது - தனித்தனி வாகனங்களில் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல திட்டம்!

07:52 AM Jun 14, 2024 IST | Web Editor
Advertisement

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கொச்சியிலிருந்து தனித்தனி வாகனம் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

Advertisement

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர்.  இந்நிலையில்  13ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.  இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது.

இந்த  தீவிபத்தில் தற்போது வரை 43 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும்,  பலியானவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த பலர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், உயிரிழந்த 45 பேரின் உடல் இன்று காலை டெல்லி கொண்டு வரப்படுகிறது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் உடல் கேரள மாநிலம் கொச்சின் கொண்டு
வரப்படும் நிலையில் விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை மீட்டு
உறவினர்களிடம் ஒப்படைக்க வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சஎ செஞ்சி
மஸ்தான் கொச்சின் செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை
சந்தித்தார்.

அப்போது பேசியவர் அவர் தெரிவித்ததாவது..

“ குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் இரவு நேரத்தில் திடீரென ஏற்பட்ட
தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.  தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு உறவினர்களிடம் விரைந்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் ரூபாய் 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இன்று காலை 9 மணிக்கு மேல் உயிரிழந்தவர்கள் உடல் கொச்சி வந்தடையும். கொச்சியிலிருந்து தனித்தனி வாகனம் மூலம் உயிரிழந்தவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது” என செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

Tags :
KuwaitKuwait Fire Accidentminister senji mastanminister senji masthan
Advertisement
Next Article