குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் - கொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது!
குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர். இந்நிலையில் 13ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது. இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது.
இந்த தீவிபத்தில் தற்போது வரை 43 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும், பலியானவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த பலர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
வரப்படும் நிலையில் விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை மீட்டு
உறவினர்களிடம் ஒப்படைக்க வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி
மஸ்தான் கொச்சின் சென்றடைந்தார். இதேபோல கேரள மாநில முதலமைச்சரான பினராயி விஜயனும் கொச்சி விமான நிலையம் சென்றார்.
தமிழ்நாட்டைச் சார்ந்த உயிரிழந்த 7பேரின் உடல்களும் தனித் தனி வாகனங்கள் மூலம் அவர்களது ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.