For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து - 86 பேர் பலி!

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 86 பேர் பலியாகியுள்ளனர்.
09:15 PM Sep 12, 2025 IST | Web Editor
காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 86 பேர் பலியாகியுள்ளனர்.
காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து   86 பேர் பலி
Advertisement

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு  காங்கோ. இந்நாட்டில்  பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சிப்படையினருக்கும் இடையே தொடர் மோதல்களால் நாட்டின் பெரும்பாலான சாலைகள் முடக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதனால்  அந்நாட்டு மக்கள் பெரும்பாலும் நீர்வழிப் போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வடமேற்கு காங்கோவில் அமைந்துள்ள ஈக்வடோர் மாகாணத்தில்  கடந்த புதன்கிழமை பசகன்சு பகுதியில் இருந்து மோட்டார் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் 86 பேர் உயிரிழந்தனர். அதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் மாணவர்கள் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் விதிமுறைக்கு மாறாக அதிக பேர் பயணித்தது, இரவில் படகை செலுத்துதியது ஆகியவையே இந்த  விபத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டிகள் எழுந்துள்ளது.

பயணப்படகுகளில் அதிக நபர்களை ஏற்றக்கூடாது என காங்கோ நாட்டு அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் இதுப்போன்ற படகு விபத்துகள் அந்நாட்டில் நிகழ்வது தொடர்கதையாகி வருகின்றது.

Tags :
Advertisement