For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒரே நாளில் மோதும் ‘ப்ளூ ஸ்டார்’ மற்றும் ‘சிங்கப்பூர் சலூன்’!

04:51 PM Jan 06, 2024 IST | Web Editor
ஒரே நாளில் மோதும் ‘ப்ளூ ஸ்டார்’ மற்றும் ‘சிங்கப்பூர் சலூன்’
Advertisement

அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படமும்,  ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படமும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. 

Advertisement

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன்,  சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.  இத்திரைப்படத்தை நீலம் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.  கீர்த்தி பாண்டியன்,  பிருத்விராஜ், பகவதி பெருமாள்,  இளங்கோ குமாரவேல்,  லிசி அந்தோணி,  திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.  கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்ளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில்,  கோகுல் இயக்கத்தில் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படமும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. சத்யராஜ்,  தலைவாசல் விஜய் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.  ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் படத்தை தயாரித்துள்ளது.

Tags :
Advertisement