For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இன்று பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

06:44 AM Jan 10, 2024 IST | Web Editor
இன்று பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம்   தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
Advertisement

போக்குவரத்துத் தொழிலாளா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைக்காவிட்டால் இன்று (ஜன. 10) தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளை மறித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Advertisement

போராட்டம் குறித்து சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் நேற்று (ஜன. 09) மாலை செய்தியாளா்களிடம் கூறியது, “வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் அளிக்கும் பேட்டி உண்மைக்கு மாறாக உள்ளது. அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடத்துவதாக குற்றம் சாட்டுவதில் எந்தவித நியாயமும் இல்லை. வேலைநிறுத்தம் தொடங்கிய ஒரே நாளில் ஏராளமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

இந்நிலை தொடர்ந்தால் கடும் விளைவுகள் ஏற்படும். அரசு உடனே தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் மாற்று ஓட்டுநர்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகளை மறிக்கும் போராட்டம் நடைபெறும். சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமையகமான பல்லவன் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெறும்‘ என தெரிவித்தார்.

அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலர் ஆர்.கமலகண்ணன் கூறியது: ‘50% ஊழியா்கள் பணிக்குச் செல்லவில்லை. எனினும் 95% பேருந்து ஓடியதாக அரசு தவறான தகவலைத் தெரிவிக்கிறது. அகவிலைப்படி விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டால் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படும். இல்லையென்றால் வேலைநிறுத்தம் தொடரும். அதே நேரம், நீதிமன்ற உத்தரவுக்கும் கட்டுப்படுவோம்’ என தெரிவித்தார்.

Tags :
Advertisement