For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

10 நிமிடங்களிலேயே #iPhone16 டெலிவரி? அசத்தும் பிளிங்கிட் செயலி!

01:47 PM Sep 20, 2024 IST | Web Editor
10 நிமிடங்களிலேயே  iphone16 டெலிவரி  அசத்தும் பிளிங்கிட் செயலி
Advertisement

பிளிங்கிட்டில் புதிய ஐபோன்16 ப்ரோ மேக்ஸை ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படுகிறது.

Advertisement

ஆப்பிள் ஐபோன் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இட்ஸ் க்ளோடைம் நிகழ்வு இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமாக ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகியவற்றை வெளியிட்டது. இந்நிலையில் ஆப்பிள் தனது ஐபோன் 16 சீரிஸ் விற்பனையை இந்தியாவில் இன்று தொடங்கியது. இதனை வாங்க டெல்லி மற்றும் மும்மையில் உள்ள ஆப்பிள் கடைகளுக்கு வெளியே ஏராளமானோர் குவிந்தனர்.

ஐபோன் 16 சீரிஸ் மாடல் நேரடி விற்பனைக்கு வருவதற்கு முன்பே, 37 மில்லியனுக்கும் அதிகமாக முன்பதிவு மூலம் முன்விற்பனை செய்யப்பட்டது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உட்பட கிட்டத்தட்ட 60 நாடுகளில் இன்று ஆப்பிள் நிறுவனம் விற்பனையை தொடங்கியது.

இதையும் படியுங்கள் : #Nandhan - சாதிய இழிவு தீண்டாமை குப்பைகளை எரிக்கும் புரட்சி தீக்குச்சி! சீமான் புகழாரம்!

சோமேட்டோக்கு சொந்தமான பிளிங்கிட் இப்போது புதிய ஐபோன்16 ப்ரோ மேக்ஸை விற்பனை செய்கிறது. அதன்படி, டெல்லி, மும்பை, புனே ஆகிய இடங்களில் உள்ளவர்கள் பிளிங்கிட் செயலி மூலம் தங்கள் வீட்டில் இருந்தே புதிதாக அறிமுகமாகியுள்ள புதிய ஐபோன்16 ப்ரோ மேக்ஸை ஆர்டர் செய்யலாம் என தகவல் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு சிறப்பு செய்தியும் உள்ளது. என்னவென்றால், அறிமுக நாளில் ஆரடர் செய்த 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிளிங்கிட்யின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அல்பிந்தர் திந்த்சா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது ;

"புதிய ஐபோன்16 ப்ரோ மேக்ஸ் இப்போது பிளிங்கிட்யில் கிடைக்கிறது. டெல்லி , மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் பிளிங்கிட் மூலம் ஐபோன்16 ப்ரோ மேக்ஸ் ஆர்டர் செய்துக்கொள்ளலாம். அறிமுக நாளில் 10 நிமிடங்களில் புதிய ஐபோனை உங்கள் கைகளில் வைக்கும் பிளாட்ஃபார்ம் மிகவும் பெருமையாக இருக்கிறது"

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement