"12 நிமிடங்களிலேயே சீலிங் ஃபேன் டெலிவரி" - வைரலாகும் பிளிங்கிட் செயலியின் பதிவு!
பிளிங்கிட் செயலியில் இனி 12 நிமிடங்களில் சீலிங் ஃபேனை டெலிவரி செய்ய போவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது.
பிளிங்கிட் என்பது வீட்டுக்கு தேவையான அன்றாட பொருட்களை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் செயலி ஆகும். இந்நிலையில், பிளிங்கிட் செயலி சில நாட்களுக்கு முன்பு அன்றாட பொருட்களை வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யும் PS5 செயலிகள் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தது.
இதையும் படியுங்கள் : “I.N.D.I.A.கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பிரச்னை இல்லை” – டி. ராஜா பேட்டி!
Stoked to see how well Arindam and team are building Atomberg. Happy to be a part of their journey 🙌 https://t.co/3DqZz1zoDG
— Albinder Dhindsa (@albinder) April 11, 2024
தற்போது, பிளிங்கிட் செயலியின் தயாரிப்புகளின் பட்டியலில் மற்றொரு தகவலை சேர்த்துள்ளது. அதில், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Atomberg Tech நிறுவனத்துடன் இணைந்து சீலிங் ஃபேன்களை 12 நிமிடங்களில் டெலிவரி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை பிளிங்கிட் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. இந்த பதிவில், "மற்ற இ-காம் இயங்குதளங்களைப் போன்றே விலை. 12 நிமிடங்களில் டெலிவரி. இந்த கோடையில் நாம் எவ்வளவு விற்கிறோம் என்பதைப் பார்ப்போம்" தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இந்த பதிவு பயனர்களிடமிருந்து நிறைய எதிர்வினைகளைப் பெற்றது. குறிப்பாக, "விரைவில் பிளிங்கிட் ஏர் கண்டிஷனர்களையும் விற்கத் தொடங்கும்" , 'ஏசி அடுத்தது' என்று நகைச்சுவை பதிவுகள் பதிவிட்டுள்ளனர்.