For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 5 பேர் உயிரிழப்பு!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள தாலிபான் ஆதரவு பெற்ற மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
08:17 PM Feb 28, 2025 IST | Web Editor
பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு   5 பேர் உயிரிழப்பு
Advertisement

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்பு பாடசாலை பகுதியில் உள்ள ஒரு மசூதியில் இன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 5 பேர் பலியாகினர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

ஆப்கானிஸ்தான் தாலிபான்களுடன் தொடர்பு கொண்டதாக அறியப்பட்ட ஜாமியா ஹக்கானியா பள்ளிக்குள் நடந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை என்று செய்தி நிறுவனம் அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் தொடங்க உள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement