பணிப்பெண்களிடன் மன்னிப்பு கேட்ட Blackpink ஜென்னி! ஏன் தெரியுமா?
பிளாக் பிங்க் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஜென்னி பணிப்பெண்களின் அருகில் புகைப்பிடித்த வீடியோ வைரலான நிலையில், அந்த சம்பவத்திற்காக ஜென்னி அந்த பணிப்பெண்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
பிளாக் பிங்க் தென் கொரியாவில் சிறந்த கே-பாப் பெண் குழுக்களில் ஒன்றாக திகழ்கிறது. இக் குழுவின் பாடல்கள் அதிக எண்ணிக்கையிலான பார்வைகளை பெருவதுடன் இந்த குழுவிற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சூழலில் பிளாக் பிங்க் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஜென்னி அலுவலக சிகை அலங்கார அறையில் புகைப்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. ஜென்னி புகைப்பிடிக்கும் நேரத்தில் அவரின் அருகில் சில பணிப்பெண்களும் இருந்தனர். இந்த வீடியோ யூடியூப் வைல் பிளாக்கில் வெளியானது.
தென்கொரியாவில் அலுவலகத்திற்குள் புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ள சூழலில் இந்த வீடியோ வெளியாக சர்ச்சைக்குள்ளானது. ஜென்னிக்கு ஆதராகவும், அதே நேரத்தில் அவருக்கு எதிராகவும் பலரும் விமர்சனம் செய்தனர். தென்கொரியாவின் வெளியுறவு துறை அமைச்சகம் இது தொடர்பாக புகாரைப் பெற்றதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இது குறித்து இணையவாசி ஒருவர் பேசுகையில், "இந்த சம்பவம் தென்கொரியாவில் நடைபெறவில்லை. இத்தாலியில் நடந்தது. இதனால் இத்தாலியில் உள்ள தென்கொரிய தூதரகத்தை தொடர்பு கொண்டு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜென்னியின் ஏஜென்சியான ஓஎ என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட அறிக்கையில், ஜென்னியின் செயலுக்கு வருத்தமடைவதாக கூறி, ஜென்னியின் சார்பாக மன்னிப்பு கேட்டது. மேலும், ஜென்னி புகைப்பிடித்த போது ஜென்னியின் அருகில் இருந்த பணிப்பெண்களிடம் ஜென்னி மன்னிப்பு கோரியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்து.
Jennie smoking Vape 💨 in her vlog pic.twitter.com/yi3DH8DsQW
— no na (@nona15648321) July 8, 2024